I got my name in lights with notcelebrity.co.uk

Saturday, October 29, 2011

இவர்கள் மாணவர்களா மெசீன்களா?

படிக்கும் குழந்தையின் மனநிலை என்ன?

இங்கு   மாணவர்கள் தங்கியும்(hostel students) வெளியே இருந்தும் வந்தும் (dayscholer  Students) மாணவர்கள் படிக்கிறார்கள்.இங்கு படிக்கும் மாணவர்களில் நன்றாக படிக்கும் மாணவர்கள் என்றால் அது லோக்கல் மாணவர்கள்தான்.ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவர்களும் நன்றாகத்தான் படிக்கிறார்கள் ஆனால் மதிப்பெண் விசயத்தில் days choler  மாணவர்கள் அதிகம் மதிப்பெண் பெறுகின்றனர்.
காரணம் ரிலக்ஸேசன்.பள்ளியில் தங்கி படிக்கும் போது அது கொஞ்சமும் கிடைப்பது இல்லை எப்போதும் படிப்பு, புத்தகம், அதே இடம் ,ஆசிரியர்கள், ஸ்டடி மாஸ்டர்கள் கொஞ்சமும் வெளிஉலகம் பற்றி தெரியாது சுதந்திர காற்று இல்லாத பட்சத்தில் மார்க் எப்படி வாங்க முடியும் இதுதான் என் கேள்வி?

இந்த மூன்று நாள் தீபாவளி விடுமுறை நாளில் ஊருக்கு போக ஒரு நாள் வர ஒரு நாள் இடையில் தீபாவளி மாணவர்கள் எப்படி ரிலாக்ஸாக படிப்பார்கள் ?இதை பெற்றோரும் நிர்வாகமும் யோசிக்க வேண்டும்.நிர்வாகத்திற்கு  பணத்தை தவற வேற ஏதும் தெரியாது பெற்றோர்களும் பிள்ளைகள் படித்தால் மட்டும்  போதும். ஆனால் பதிப்படைவது மாணவர்கள்தான் அதை பெற்றோரும் நிர்வாகமும் உணராத பட்சத்தில் மாணவர்கள் நிலை இப்படித்தான் இருக்கும்     


2 comments:

  1. நல்ல ஆதங்கம் நல்ல பதிவு
    புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் நல்லது
    பயனுள்ள பதிவைத் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ரொம்ப நொந்து போயிருக்கீங்க போலிருக்கு... மாணவர்கள் அவரவர் பெற்றோரிடம் விண்ணப்பம் வைத்தாலே போதுமே... இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு எட்டப் படும்

    ReplyDelete