I got my name in lights with notcelebrity.co.uk

Monday, October 10, 2011

இப்படியும் ஒரு பள்ளி இது நியாயமா?

இப்படியும் ஒரு பள்ளி இது நியாயமா?

அந்தியூர்க்கு  அருகில் அமைந்துள்ளது ஒரு பெரிய தனியார் பள்ளி இதை பள்ளி என்பதை விட சிறுவர்களின் ஜெயில் என குறிப்பிடலாம் அங்கு வேலை செய்யும் ஆசிரியர்களுக்கும் அபபடித்தான் நண்பர்களே இங்கு மாதம் ஒரு பெரிய தொகையை மெஸ் பீசாக ஒரு பெரிய தொகை வாங்கப் பட்டாலும் சிறுவர்களுக்கு சரி இல்லாத உணவைத்தான் கொடுக்கிறார்கள்.

பள்ளியில் இப்போதெல்லாம் விடுமுறை என்பதே விடுவதில்லை ஏனென்றால் விட்டால் அந்த நாட்களின்  மெஸ்  பீஸ் போய்விடுமே அதனால் விடுமுறை கிடையாது வாரத்தில் எல்லா நாட்களும் பள்ளி உண்டு.

இந்த முறை காலாண்டு தேர்வு விடுமுறை அரை நாள் கூட விடவில்லை தேர்வு முடிந்த மதியமே வழக்கம் போல பள்ளி செயல்பட்டது இதான் மிகப்பெரிய கொடுமை அதை விட கொடுமை தீபாவளிக்கு வெறும் மூன்று நாட்களே விடுமுறை.

தமிழகத்தின் எல்லா மாவட்டங்களில் இருந்தும் குழந்தைகள் படிக்கிறார்கள் மூன்று நாட்கள் விடுமுறை விட்டால் அவர்கள் பயணம் செய்யவே மூன்று நாட்கள் ஓடிவிடும் பாவம் அவர்களின் முகத்தில் ஏக்கம் தெரிகிறது அப்புறம் எப்படி படிப்பார்கள் சொல்லுங்க 

பெற்றோர்களும் இதைப்பற்றி கேட்பது இல்லை ஒருவர் இருவர் கேட்டு என்ன பிரயோஜனம் பெற்றோர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் படிப்பு முக்கியம்தான் அதற்க்கு கொஞ்சம் வோய்வும் வேண்டும் இதனால் குழந்தைகளின் மனநிலை மிகவும் பாதிக்கப் படுகிறது இதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இங்கு அரசு விடுமுறை நாட்களிலும் பள்ளி செயல் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இங்கு மாணவர்களின் நிலை பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

13 comments:

  1. உங்கள் ஆதங்கம் சரியானது ஆனால் தலைப்பை மாற்றுங்கள் "பள்ளியின் மீது தவறு சொல்லி என்ன செய்வது? அந்தியூர்க்கு பக்கத்தில் உள்ள அந்த தனியார் பள்ளியை பற்றி எனக்கு தெரியும் அதன் கூறுகிரேன். தெரிந்து தானே பெற்றோர்கள் அந்த பள்ளியில் தன் பிள்ளைகளை சேர்த்துகின்றனர்! தவறு பெற்றோர்கள் மீது.

    // இங்கு மாணவர்களின் நிலை பற்றி அடுத்த பதிவில் காண்போம்.// - அந்த பள்ளியில் மட்டும் இல்லை இன்று தமிழகதில் உள்ள 90% தனியார் பள்ளிகளில் 10th மற்றும் +2 மாணவர்களுக்கு விடுமுறை இல்லை, காரணம் அவர்களுடைய Schoolன் தரத்தை உயர்த்தவும், நல்ல Result குடுத்தால் தான் அடுத்த வருடம் அதிக மாணவர்கள் வருவார்கள் என்பதாலும்.

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே ஆனால் சென்ற வருடம் விட்ட அளவுக்கு கூட இந்த வருடம் விடுமுறை இல்லை இதை பெற்றோர்கள்தான் கேட்க வேண்டும் ஆனால் அப்படி கேட்டாலும் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதைத்தான் செய்கிறார்கள்

    ReplyDelete
  3. தமிழ்மகன் said...
    //அந்த பள்ளியில் மட்டும் இல்லை இன்று தமிழகதில் உள்ள 90% தனியார் பள்ளிகளில் 10th மற்றும் +2 மாணவர்களுக்கு விடுமுறை இல்லை, //

    நண்பரே மற்ற பள்ளிகளில் 10th &12th க்கு மட்டும்தான் விடுமுறை இல்லை ஆனால் இங்கு 6th கே எல்லா நாளும் பள்ளி இருக்கிறது அதன் கொடுமை.

    ReplyDelete
  4. இதில் மாணவர்களின் நிலை ஒரு புறம் இருக்கட்டும், அங்கு வேலை செய்யும் தொழிலாளிகளான ஆசிரியர்கள் நிலை... எட்டு மணி நேர வேலை என்பது கனவு தானா?
    அப்புறம் அந்த ரெண்டு ரூபா ஒரு ரூபா நாணயம் ரெண்டும் ஒரே சைஸ் தலைவரே...

    ReplyDelete
  5. தங்கள் ஆதங்கம் புரிகிறது நண்பரே

    ReplyDelete
  6. தாங்கள் குறிப்பிட்டது போல் வாயுப் பிரச்சனைப் பற்றி வெள்ளிக்கிழமை பதிவிடுகிறேன் நண்பரே .

    இபொழுது உள்ளதொடர் மீதி உள்ளது அதனால்

    ReplyDelete
  7. படிக்கிற காலத்தில் நல்லா படிக்கட்டுமே நண்பரே... -:)

    ReplyDelete
  8. Please remove Word verification...

    ReplyDelete
  9. பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்!

    ReplyDelete
  10. suryajeeva said...
    இதில் மாணவர்களின் நிலை ஒரு புறம் இருக்கட்டும், அங்கு வேலை செய்யும் தொழிலாளிகளான ஆசிரியர்கள் நிலை... எட்டு மணி நேர வேலை என்பது கனவு தானா?

    அவர்களின் நிலை மகா கொடுமை நண்பரே தங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  11. //M.R said...
    தங்கள் ஆதங்கம் புரிகிறது நண்பரே//

    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  12. //ரெவெரி said...
    படிக்கிற காலத்தில் நல்லா படிக்கட்டுமே நண்பரே... -:)//

    அவர்கள் நன்றாக படிக்க வேண்டும் நண்பரே அதன் என் ஆசையும் ஆனால் எப்படி ஒரு சூழலில் அவர்கள் எப்படி படிப்பார்கள் அதான் என் வாதம்

    ReplyDelete
  13. //சென்னை பித்தன் said...
    பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்!//

    நன்றி சார் இன்னிக்கு கிளைமாக்ஸ் உங்க கதையோட படிக்க ஆவலா இருக்கேன்

    ReplyDelete